திங்கள், 23 நவம்பர், 2015

தக்காளியில் உள்ள வியக்கத்தக்க 9 நன்மைகள்!!!

தக்காளியில் உள்ள வியக்கத்தக்க 9 நன்மைகள்!!!



குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பும் ஒரு காய் வகை தான் தக்காளி. இதில் உள்ள சிறப்பம்சமே இதனை பச்சையாகவே உண்ணலாம். அப்படிப்பட்ட தக்காளி என்றால் உங்கள் நினைவுக்கு வருவது அதன் இனிப்பு மற்றும் சுவை தான். அது உடல்நலத்திற்கு நன்மையை விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியும் தானே. சரி அது ஏன் ஆரோக்கியமான உணவாக விளங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?... அதிலுள்ள வைட்டமின் சி சத்தின் காராணமாகவா? குறைந்த கலோரிகள் உள்ளதாலா? கொழுப்பு இல்லாததாலா? ஆம்! ஆம்!! ஆம்!!!


 ஆனால் அதையும் தாண்டி இன்னமும் கூட சில காரணங்கள் உள்ளது. சரி, தக்காளி ஏன் ஆரோக்கியமான தேர்வாக உள்ளது என்பதை பற்றி பார்க்கலாமா? சிவந்த, பழுத்த தக்காளியை ஒரு கப் (150 கிராம்) அளவிற்கு உண்ணும் போது, போதுமான அளவு வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் கிடைக்கும். இயற்கையாகவே தக்காளியில் சோடியம், சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கிறது. உயிர்ச்சத்து பி1, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரமும் தக்காளியில் உள்ளதால், அது ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணையாக நிற்கும். இது போக 150 கிராம் தக்காளியில், 2 கிராம் நார்ச்சத்து உள்ளது. தினமும் பரிந்துரைக்கப்படும் அளவில் 7 சதவீத நார்ச்சத்து இதில் இருந்தே கிடைத்துவிடுகிறது. தக்காளியில் நீர்ச்சத்தும் அதிகமாக உள்ளது. அதனால் அது வயிற்றையும் நிரப்பிவிடும். மேலும் இரத்தக் கொதிப்பு, அதிக கொழுப்பு, வாதம் மற்றும் இதய நோய்களில் இருந்தும் தக்காளி காக்கும். சத்தான ஊட்டச்சத்தின் கலவையாக தக்காளி விளங்கினாலும், அதையும் மீறி இன்னும் இதில் பல நன்மைகள் அடங்கியுள்ளது.

தோல்நோய்களை குணப்படுத்தும் பீர்க்கங்காய்

தோல்நோய்களை குணப்படுத்தும் பீர்க்கங்காய்



நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் காய்களே எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும். நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது. பீர்க்கங்காயில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது. செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்: கார்போஹைட்ரேட்டுகள், கரோட்டீன், வைட்டமின் ஏ,சி, கொழுப்பு, புரதம், ஃபைட்டின், அமினோஅமிலம், அலனைன், ஆர்ஜினைன், கனிகளில் லினோலிக் அமிலம், ஒலியிக், பால்மிட்டிக், ஸிடியரிக் அமிலம் போன்றவை காணப்படுகின்றன. முழுத்தாவரமும் மருந்து இதன் இலை, விதைகள், வேர் என பீர்க்கங்காயின் முழுத்தாவரமும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே. கசப்பான மருந்தாகும். விதைகள் பேதியை தடுக்கும், கபம் வெளியேற்றும், பேதிமருந்து, எண்ணெய் தோல் நோய்களுக்கு தடவும் மருந்தாகப் பயன்படும். இலைகள் பொடிக்கப்பட்டு இரத்தக் கட்டிகளின் மீது தடவப்படும், கண் வலிக்கு இலைகளின் சாறு பயன்படும். வேரானது நீர்க் கோர்வைக்கும், மிதமான பேதி மருந்தாகவும் பயன்படுகிறது. நீரிழிவு குணமடையும் நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம். பீர்க்கங்காயின் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது. இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்ணீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர வேண்டும். இதன் மூலம் இரத்த விருத்தி ஏற்படும். பீர்க்கை தோல் நோய்க்கிருமிகளை அழித்துவிடும். பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது. கஷாயம் மாதவிடாய் மற்றும் சிறுநீர்க் கோளாறுகளுக்கு பயன்படும். நாள்பட்ட புண்களை குணமாக்கும் சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். மேலும் மூத்திரக்கடுப்பை நீக்கும். மிதமான பேதி மருந்து. மூச்சுத்திணறல் நோய்க்கு நல்ல மருந்து, மண்ணீரல் பெரிதானதை குணப்படுத்தும். மலை ஜாதியினர் இந்த மருந்தை வலிப்பு நோய், மூச்சுப்பிடிப்பு, புண்கள், சிரங்குகள் ஆகியவற்றில் பயன்படுத்துவர். கனிகள் - கசப்பான நன்மருந்து, பேதிமருந்து, நோயை ஆற்றும், வாந்தி மருந்து.

உருளைக்கிழங்கு உண்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

உருளைக்கிழங்கு உண்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!



பல வகையான கிழங்கு வகைகள் உள்ளன. அதில் முக்கியமான ஒரு கிழங்காகவும், அனைவருக்கும் பிடித்த கிழங்காகவும் கருதப்படுவது உருளைக்கிழங்கு. இத்தகைய உருளைக்கிழங்கை விரும்பாதவர்களே இருக்க முடியாது. உருளைக்கிழங்கு இல்லாத காய்கறியை நினைத்துப் பார்க்க முடிகிறதா? முடியாதல்லவா... உருளைக்கிழங்கு இல்லாத சமையலறையே இருக்காது. சொலானம் ட்யூபரோசம் என்ற விஞ்ஞான பெயரைக் கொண்ட இக்கிழங்கு ஒரு சீரான உருவமே இல்லாமல் அழகற்றதாக இருக்கும். இப்படி இருந்தும் அதனை ஈர்க்கும் பொருட்டு நம் மீது ஏதோ மந்திரத்தை இது தூவியிருக்க வேண்டும். உருளைக்கிழங்கு விரும்புபவர்களுக்கும் சரி, அதை விரும்பாதவர்களும் சரி, அதனை சமமான அளவு நேசித்தே ஆக வேண்டும். ஏனென்றால் வெறும் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் தவிர, அதிலிருந்து அவிழ்க்கப்பட வேண்டிய ரகசியங்கள் மேலும் உள்ளன. இத்தகைய இரகசியங்கள் என்னவென்று பார்க்கலாம். ஆனால் அதற்கு முன்பு அதில் உள்ள தீமைகளையும் அனைவரும் அறிந்ததாக வேண்டும். அது என்னவென்றால், உருளைக்கிழங்கு உண்ணுவதில் சிறு அச்சமும் இருக்க வேண்டும். பச்சை உருளைக்கிழங்கு நச்சுத்தன்மை உடையது. அதே போல் உருளைக்கிழங்கின் இலைகள் மற்றும் பழங்களும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. அதில் ஓலனைன், சாக்கோனைன் மற்றும் ஆர்செனிக் போன்ற அல்கலாய்டுகள் உள்ளதால், இவை அதிக அளவு உடலினுள் சென்றால் பெரும் ஆபத்தை விளைவிக்கும். சரி, இப்போது அதன் நன்மைகளை ஒவ்வொன்றாக பார்ப்போமா!!!

எடை கூடுதல் உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.

வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!


வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!


வெங்காயம் என்றாலே அனைவரும் பயப்படுவது அதிசயம் இல்லாத ஒன்றுதான். வெங்காயம் வெட்டினாலே கண்ணிலிருந்து கண்ணீர் வரும் என்று தான் நாம் அனைவரும் அறிகின்றோம். ஆனால் அவற்றில் இருக்கும் மருத்துவ குணத்தை யாரும் அறிவதில்லை. இயற்கை நமக்கு அளித்துள்ள ஒரு வரப்பிரசாதம் தான் வெங்காயம். இவை பூச்சிக்கடி, ஆஸ்துமா, சளி, கபம் போன்ற நோய்களிலிருந்து நம்மை காக்கும். சங்க காலத்திலிருந்தே வெங்காயத்தின் மருத்துவ குணத்தை மருத்துவர்கள் அறிந்துள்ளனர். பசியுணர்வு இல்லாதவர்கள் வெங்காயத்தை உண்பதால் பசி உணர்வு தூண்டப்பட்டு, உடலின் அழற்சி நீக்கப்பட்டு, உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி அளிக்கப்படுகின்றது. மிளகை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! வெங்காயத்தில் கால்சியம், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. அவை உடலுக்கு மிகவும் நல்லது. ஈர மணலில் வெங்காயம் வளர்க்கப்படுகின்றது. சுவையான மற்றும் சத்தான சமையலுக்கு வெங்காயம் மிகவும் அவசியம். இதை சுற்றி மற்ற காய் செடிகளை வளர்க்கும் போது இவை நன்றாக வளர்கின்றது. இத்தகைய மருத்துவ குணம் நிறைந்த வெங்காயத்தின் சிறப்புகளைப் பார்ப்போம்

பற்களுக்கு நல்லது வெங்காயம் பெரும்பாலும் பல் சிதைவு மற்றும் வாய் நோயை தடுக்க பயன்படுத்தப்படுகிறது. அதிலும் 2-3 நிமிடங்கள் வெங்காயத்தை வாயில் போட்டு மெல்லுவதால், வாய் கிருமிகளை அழிக்க முடியும்.

பசியை தூண்டும் புதினா


பசியை தூண்டும் புதினா



நமது அன்றாட சமையலில் சுவையும், மணமும் தரும் பொருட்களில் புதினாவிற்கு முக்கிய பங்குண்டு. புதினா பசியைத் தூண்டும் சக்தி கொண்டது. காரச் சுவையும், மணமும் கொண்டது. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைப் போல புதினாவும் அன்றாட உணவில் பயன்படுத்தப்படுகிறது. புதினாவில் உள்ள சத்துக்கள்: புதினாவில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.அதிக நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு நார்ச்சத்தும் இதனுள் அடங்கியுள்ளன. கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்றவையும் புதினாவில் உள்ளன. இது பல்வேறு மருத்துவ குணங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்: புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். ஆஸ்துமாவை புதினா கட்டுப்படுத்துகின்றது. வறட்டு இருமல், ரத்தசோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினா குணப்படுத்துகிறது. புதினாவை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஊளைச்சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்கவும், வாயுத் தொல்லையை போக்கவும் புதினா உதவுகிறது புதினா கீரையுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரகம் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அருந்தினால் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக கல்லடைப்பு போன்றவை நீங்கும். இந்த கசாயத்தை குழந்தைகளுக்கு கொடுத்து வர அவர்களுக்கு மலக்குடலில் உள்ள பூச்சிகள் சரியாகும். புதினா இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் செய்து அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.நன்கு காய்ந்த பின் அதை எடுத்து எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை ( 8 :1 )அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும் தூளான பின் சலித்து எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பற்பொடியை தினசரி உபயோகித்து வந்தால் ஆயுள் வரை பல் சம்பந்தமான எந்த ஒரு நோயும் வராது. வாய் துர்நாற்றத்தை புதினா போக்குகிறது. புதினா தேநீர்: புதினாவை நிழலில் காயவைத்து, பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினாவை சூப்செய்து சாப்பிடுவது நல்லது. சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்தால் உடல் உஷ்ணம் தணியும், எரிச்சல் கட்டுப்படும். பெண்களுக்கு மாத விலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி பிரச்சினைக்கு புதினாக் குடிநீர் சிறந்த மருந்தாகும். புதினாவில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் மருத்துவ குணம் உடையது. புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பள பளக்கும் மாமிசங்களை பதப்படுத்தும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு. பிரியாணி மற்றும் இறைச்சி வகைகளிலும் புதினா பயன்படுத்தப்படுகிறது.

சமையலறையில் மருத்துவப் பொருள் - இஞ்சி



சமையலறையில் மருத்துவப் பொருள் - இஞ்சி


“சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை" என்பது பழமொழி இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி பங்கு உண்டு. உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்யவதோடு பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதால் அனைத்து வகையான சமையலிலும் இஞ்சி இடம்பிடித்துள்ளது. நமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக அதிகம் உபயோகப்படக்கூடியது வகிக்கக்கூடியது இஞ்சி மற்றும் சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. உலர்ந்த இஞ்சியே சுக்கு எனப்படுகிறது. வேதிப்பொருள் இத்தாவரத்தின் மருத்துவப் பயன்களுக்கு அடிப்படையாக இருப்பவை எளிதில் ஆவியாகும். எண்ணெய்கள் மற்றும் ஓலியோரெசின்களாகும். ஜின்சிபெரின், ஜின்ஜிரால் மற்றும் செயல்பாட்டு வேதிப்பொருள்களாக உள்ளன. பித்தம் தொடர்புடைய நோய்களுக்கு சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் ' பேசில்லஸ்" பாக்டீரியா தோற்றுவிக்கும் வயிற்றுப்போக்கினைத் தடுக்கும் திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அஜீரணம், வயிற்று உப்புசம், குடல்வலி, ஆகியவற்றிர்கு மருந்தாக பயன்படுகிறது. காலைநோய் எனப்படும் தலைச்சுற்றல் - வாந்தி போக்கக்கூடியது.. கிருமிகளுக்கு எதிரானசெயல், வயிற்று நோய்கள், மற்றும் சிலவகை உணவு நச்சுத்தன்மையாக மாறுவதை தடுக்கும். இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது. மாரடைப்பு, ஆஸ்துமா குணமாகும் இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் ஒரு அவுன்ஸ் எடுத்து தேனில் கலந்து கொடுத்தால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், மூச்சிரைப்பு (ஆஸ்துமா) குணமாகும் முகப்பொலிவிற்கு இஞ்சி - தேன் இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் சீவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் கட்டுப்படும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். இஞ்சி முறபா மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து வரும் இரைப்பு போன்றவை குணமாகும். சர்க்கரை நோய்க்கு மருந்து இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். வலி நிவாரணி வாந்தியுடன் கூடிய மயக்கத்தை போக்குகிறது. பயணநோய், மற்றும் அறுவை சிகிச்சைக்குப்பின்னர் ஏற்படும் வாந்தி மயக்கத்திற்கு சிறந்த மருந்து. தசைவலி மற்றும் பல்வலி, முகத்தில்வலி ஆகியவற்றிர்கு காய்ந்த தரையடித் தண்டு ( சுக்கு) தண்ணீரில் இழைத்து பசையினை நெற்றியில் பற்று போட்டால் வலி குணமடையும்.

அறிவையும், அழகையும் அதிகரிக்கும் வெண்டைக்காய்!

அறிவையும், அழகையும் அதிகரிக்கும் வெண்டைக்காய்!



பரீட்சை காலமாக இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வெண்டைக்காயை வதக்கி சாப்பிடக் கொடுப்பார்கள். மூளை சுறுசுறுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும் என்பதே இதற்குக் காரணம், இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவர பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன. வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ். இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். 

அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களிலும் இன்னும் சில நாடுகளிலும் வெண்டைக்காய் விதையை காபிப் பொடியாகப் பயன்படுத்துகிறார்க்ள. கொழுப்பை கரைக்கும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். 

இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது. கொழ கொழ காய் வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வாய்நாற்றம் அகலும் வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும். ஆண்மையை அதிகரிக்கும் வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு 
தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது. நன்மை தரும் பாக்டீரியா இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி காணப்படுகிறது. வெண்டைக்காயை குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து தரலாம். வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ் (laxative.) உள்ளது. இது உடல் நலனுக்கு ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது. வாய்வு கோளாறுகளை தடுக்கிறது. வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை கூந்தலில் தடவி வர கூந்தல் உதிர்தலை தடுக்கும். இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மினுமினுப்பான தோலையும் பெறலாம். சுறுசுறுப்பாகவும் வாழலாம்